நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட பறக்கும் படையினர் மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மேலூர் அருகே வாகன தணிக்கைச் சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து மதுரை விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் வாகனத்தை சோதனை செய்தபோது, அவ்வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தையும்,12 கிலோ அளவிலான தங்கம், 52 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் வைர நகைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ3.35 கோடி என்பதால் இது குறித்து வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தி, நகைகளை வருமான வரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.