தமிழ்நாட்டில் இன்று (ஜூலை மூன்று) ஒரே நாளில் 4329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரேநாளில் மொத்தம் 80 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், தற்போது 2,405 பேர் அம்மாவட்டத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மதுரையில் இதுவரை மொத்தம் 51 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னை, மதுரை வரிசையில் சேலத்திலும் ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு