ETV Bharat / state

’ஈசலைப் பிடித்து உண்ணும் மக்கள்’ - இது மதுரை பாரம்பரியம்! - களைகட்டும் ஈசல் சீசன்

மதுரை: மழைக்காலம் என்பதால் பகலில்  புறநகர்ப் பகுதிகளில் ஈசல் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,மக்கள் ஈசலைப் பிடிப்பதிலும், பிடித்து உண்பதிலும் போட்டி போடுகின்றனர்.

eesal-season-madurai-villagers
author img

By

Published : Oct 2, 2019, 8:25 PM IST

தற்போது ஈசல் சீசன் என்பதால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பறந்து திரியும் ஈசலைப் பிடிப்பதிலும், பிடித்து உண்பதிலும் போட்டி போடுகின்றனர் மக்கள். மழைக்காலம் என்பதால் பகலில் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் ஈசல் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. புரதமும், கொழுப்புச் சத்தும் நிறைந்த இவ்வகை ஈசலை சிலப் பகுதி மக்கள் அப்படியே பிடித்துத் தின்பதும் வழக்கமாகும்.

முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி கூறுகையில், 'ஐந்து வகையான ஈசல்கள் உண்பதற்கு ஏற்றவை. தற்போது நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பது திரள் ஈசலாகும். கருமுத்து ஈசல், குமுட்டாமுத்து ஈசல், சிறுபுத்து ஈசல், கவரபுத்து ஈசல் போன்ற ஈசல்களும் சாப்பிடக்கூடியவையாகும். ஊளக்கரையான் ஈசலை சாப்பிடக்கூடாது. இதற்கான சீசன் என்பது ஆடியிலிருந்து தொடங்கி புரட்டாசி வரை நீடிக்கும். பிற மாதங்களில் ஈசல் பிடிப்பதில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற குறைபாடுகளுக்கு ஈசல் ஏற்றதாகும். குடலைச் சுத்தப்படுத்தி நோயின்றிக் காக்கும் அருமருந்தாகும்' என்று அவர் கூறினார்.

மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பறந்து திரியும் ஈசல்

மேலும், இதுகுறித்து, மீனாட்சிபட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமலை கூறுகையில், 'ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடம் பாரம்பரியமாகவே உள்ளது. இதன் அருமை தெரிந்த பழைய ஆட்கள்தான் சாப்பிட்டு வருகின்றனர். இதயநோய்க்கும்கூட நல்ல மருந்தாகும். மனிதகுலம் உருவான காலத்திலிருந்து ஈசலைச் சாப்பிடுகின்ற பழக்கம் இருந்து வருகிறது' என்றார்.

இதையும் படிங்க:

'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!

Intro:ஈசலைப் பிடித்து உயிரோடு உண்ணும் மக்கள் - களைகட்டும் ஈசல் சீசன்

தற்போது ஈசல் சீசன் என்பதால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பறந்து திரியும் ஈசலைப் பிடிப்பதிலும், பிடித்து உண்பதிலும் போட்டி போடுகின்றனர் மக்கள்.Body:ஈசலைப் பிடித்து உயிரோடு உண்ணும் மக்கள் - களைகட்டும் ஈசல் சீசன்

தற்போது ஈசல் சீசன் என்பதால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பறந்து திரியும் ஈசலைப் பிடிப்பதிலும், பிடித்து உண்பதிலும் போட்டி போடுகின்றனர் மக்கள்.

மழைக்காலம் என்பதால் பகலில் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் ஈசல் சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. கறையானின் ஒரு வகையான இப்புற்றீசல், உண்பதற்கு ஏற்றதாகும். ஈரப்பதமான நேரத்தில் பூமிக்குள்ளிருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறிப் பறக்கத் துவங்கும்.

புற்றிலிருந்து வெளியேறும் ஈசலை பிளாஸ்டிக் பைகள் அல்லது கண்ணாடி பாத்திரங்கள் கொண்டு பிடிக்கின்றனர். புரதமும், கொழுப்புச் சத்தும் நிறைந்த இவ்வகை ஈசலை சில பகுதி மக்கள் அப்படியே பிடித்துத் தின்பதும் வழக்கமாகும்.

மதுரை தேனி நெடுஞ்சாலையில் காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு அருகே அமைந்துள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி கூறுகையில், 'ஐந்து வகையான ஈசல்கள் உண்பதற்கு ஏற்றவை. தற்போது நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பது திரளீசலாகும். கருமுத்து ஈசல், குமுட்டாமுத்து ஈசல், சிறுபுத்தீசல், கவரபுத்தீசல் போன்ற ஈசல்களும் சாப்பிடக்கூடியவையாகும். ஊளக்கரையான் ஈசலை சாப்பிடக்கூடாது.

இதற்கான சீசன் என்பது ஆடியிலிருந்து தொடங்கி புரட்டாசி வரை நீடிக்கும். பிற மாதங்களில் ஈசல் பிடிப்பதில்லை. ஒருவேளை அவற்றைப் பிடித்து உண்டால் உடலில் நோய் பிடிக்கும். உண்ணக்கூடிய வகையிலான ஈசல்களை பிடித்து அப்படியே உயிரோடும் உண்ணலாம் அல்லது காயப்போட்டு, வறுத்தும் சாப்பிடலாம்.

கம்பு மாவில் இடித்து, மிளகு, சுக்கு, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி சேர்த்து வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிடலாம். கெடமாலிருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற குறைபாடுகளுக்கு ஏற்றதாகும். குடலைச் சுத்தப்படுத்தி நோயின்றிக் காக்கும் அருமருந்தாகும்' என்றார்.

மீனாட்சிபட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமலை கூறுகையில், 'ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடம் பாரம்பரியமாகவே உள்ளது. இதன் அருமை தெரிந்த பழைய ஆட்கள்தான் சாப்பிட்டு வருகின்றனர். இதயநோய்க்கும்கூட நல்ல மருந்தாகும். மனிதகுலம் உருவான காலத்திலிருந்து ஈசலைச் சாப்பிடுகின்ற பழக்கம் இருந்து வருகிறது' என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.