ETV Bharat / state

உரிய காலத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தர உத்தரவு!

உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:மதுரைக்கிளை உத்தரவு

author img

By

Published : Dec 22, 2022, 10:53 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிடக்கோரி வேதாச்சலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. இதையடுத்து நீதிபதிகள், "பொருளாதார சிக்கல்களால் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படக்கூடாது, என்பதற்காக மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

எனவே, வருங்காலங்களில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆ.ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் - ED நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.