ETV Bharat / state

ஊரடங்கு முடியும் வரை உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு - eb charge bill collection case postponed

மதுரை: ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயரழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய வழக்கை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : May 14, 2020, 12:42 AM IST

நூற்பாலைகள் சங்கத்தின் வெங்கடாசலம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந் மனுவில், “பொது முடக்கத்தால் மார்ச் 24ஆம் தேதி முதல் நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வேலை முடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட மின் அழுத்த அளவிற்கான கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை மின் ஒழுங்குமுறை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த விதிமுறையை மீறி உயரழுத்த மின் இணைப்புக்கான கட்டணத்தில் 90 சதவீதம் செலுத்துமாறு மின்வாரியத்திலிருந்து ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரசீதுகளை திரும்பப் பெற்று 20 சதவீத கட்டணத்துடன் புதிய ரசீது அனுப்ப உத்தரவிட வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயரழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்"
என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையேற்ற நீதிபதி, வழக்கை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.