ETV Bharat / state

போலி வணிக உரிமம் பெற்ற நிறுவனங்களை ஆதரிக்காதீங்க! - அமைச்சர் மூர்த்தி - companies with fake business license

போலி வணிக உரிமம் பெற்ற நிறுவனங்களை வணிகர்கள் ஆதரிக்க வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி
author img

By

Published : Jun 19, 2021, 7:09 AM IST

மதுரை: வணிகத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 18) ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், வணிகர்களுடன், வணிகவரித் துறை முதன்மைச் செயலர் சித்திக், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

போலி உரிமம் பெற்ற நிறுவனங்கள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "11 ஆண்டுகளுக்குப் பின்னர் வணிக பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளோம். போலியாக வணிக உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களை வணிகர்கள் யாரும் ஆதரிக்கக்கூடாது.

அமைச்சர் மூர்த்தி பேட்டி

கட்டுப்பாட்டு அறை

போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வணிகர்கள் தங்கள் புகார்களை துறை சார்ந்த அலுவலர்களைத் தொடர்புகொண்டு தெரிவிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வணிகர்கள் புகார் அளிப்பதற்காகப் பிரத்யேக புகார் எண்களுடன்கூடிய கட்டுப்பாட்டு அறை திறப்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: நான் என்ன பிரதமரா? பப்ஜி மதன் கிண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.