ETV Bharat / state

'போலி ஆன்மிகவாதிகளை நம்பக்கூடாது' - மதுரை ஆதீனம்!

author img

By

Published : Dec 26, 2019, 10:55 AM IST

மதுரை: போலி ஆன்மிகவாதிகளை நம்பினால் அவர் மட்டும்தான் பணக்காரர் ஆவார், நம்பியவர் அப்படியே தான் இருப்பார் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Madurai Aadheenam press meet
Madurai Aadheenam press meet

மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அதில், ' தமிழ்நாட்டில் உள்ள 18 ஆதீனங்களும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருந்தால் சைவம் தழைத்தோங்கும்.

மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்து கொடுப்பதோடு, ஆன்மிகப் பணியையும் ஆதீனங்கள் செய்து வருகின்றனர். தருமபுரம் ஆதீன மடத்தில் பன்னிரு திருமுறைகளை 20ஆயிரம் பிரதிகளாக உருவாக்கி, 16 தொகுதியாக 20 நாடுகளில் வெளியிட்டுள்ளோம்.

தமிழ் வித்வான்களுக்கு விருது, ஓதுவர்களுக்கு மரியாதை, தமிழ் வளர்ப்பவர்களுக்கு மரியாதை, தமிழ்ப் புத்தக வெளியீடு, ஞானசம்பந்தர் பெயரில் இதழ் ஆகியவற்றை வெளியிட்டு வைசம் என்றால் தமிழ் என்பது போல தமிழ்ப்பணியை செய்து வருகிறோம் ' என்றனர்.

தொடர்ந்து ஆதீனம் பேசுகையில், ' மக்கள் இன்றையப் பசியைத் தீர்த்தால் போதும் என நினைக்கிறார்கள். உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். கடன் தீர்க்கிற சுவாமி என்று அந்த சுவாமியைத் தேடி போய் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வைப்பார்கள் என்ற கதை போல தான்... போலி ஆன்மிகவாதிகள்' என்று தெரிவித்தார்.

மேலும் அவர்கள் ' போலி ஆன்மிகவாதிகளை நம்பினால் அவர் மட்டும் பணக்காரராகி, நம்பியவர் அப்படியே இருக்கிறார். போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். ஆதீனங்கள் என்றால் 18. மற்றவை எல்லாம் பொய். பெயர் வேண்டுமானால் ஆதீனம் என வைத்துக்கொள்ளலாம். மற்ற ஆதீனங்கள் வருவதை வைத்து தான் தர்மம் செய்து வருகிறோம்.

மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

ஆனால், நன்கொடையாளர்களிடம் பணம் வாங்குவது கோயிலில் நல்ல காரியங்களை செய்வதற்காகவே. அதனால் நன்கொடையாளர்களை கோயிலுக்குள் சிறப்பு செய்கிறோம். மேலும் ஆதீன மடங்கள் மூலம் புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பண உதவி, நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்புகிறோம்’ என்றனர்.

இதையும் படிங்க:

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு!

Intro:போலி ஆன்மீகவாதிகளை நம்பக்கூடாது - மதுரை ஆதீனம் பேட்டி

போலி ஆன்மீகவாதிகளை நம்பினால் அவர் மட்டும்தான் பணக்காரராவார். நம்பியவர் அப்படியே தான் இருப்பார் என்று மதுரை ஆதீனம் பேட்டி.
Body:போலி ஆன்மீகவாதிகளை நம்பக்கூடாது - மதுரை ஆதீனம் பேட்டி

போலி ஆன்மீகவாதிகளை நம்பினால் அவர் மட்டும்தான் பணக்காரராவார். நம்பியவர் அப்படியே தான் இருப்பார் என்று மதுரை ஆதீனம் பேட்டி.

மதுரை ஆதீன மடத்தில் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்களும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருந்தால் சைவம் தழைத்தோங்கும். மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்பதோடு, ஆன்மீக பணியையும் ஆதீனங்கள் செய்து வருகிறோம்.

தருமபுர ஆதீன மடத்தில் பன்னிரு திருமுறைகளை 20,000 பிரதிகளாக உருவாக்கி, 16 தொகுதியாக 20 நாடுகளில் வெளியிட்டுள்ளோம். தமிழ் வித்வான்களுக்கு விருது, ஓதுவர்களுக்கு மரியாதை, தமிழ் வளர்ப்பவர்களுக்கு மரியாதை, தமிழ் புத்தக வெளியீடு, ஞானசம்பந்தர் பெயரில் இதழ் வெளியிட்டு வைசம் என்றால் தமிழ் என்பது போல தமிழ்ப்பணியை செய்து வருகிறோம்.

போலி ஆன்மீகவாதிகளை மக்கள் அதிகமாக நாடி செல்வது குறித்த கேள்விக்கு, மக்கள் இன்றைய பசியை தீர்த்தால் போதும் என நினைக்கிறார்கள். உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

கடன் தீர்க்கிற சாமி என்று அந்த சாமியை தேடி போய் பத்து லட்ச ரூபாய் வரை கடன் வைப்பார்கள் என்ற கதை போல தான் போலி ஆன்மீகவாதிகள் என்று தெரிவித்தார். போலி ஆன்மீகவாதிகளை நம்பினால் அவர் மட்டும் பணக்காரராகி, நம்பியவர் அப்படியே இருக்கிறார். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..

கைலாசா பற்றி பேச ஆதீனங்கள் விரும்பவில்லை. ஆதீனங்கள் என்றால் 18. பாக்கி எல்லாம் பொய். பெயர் வேண்டுமானால் ஆதீனம் என வைத்துக்கொள்ளலாம்.பாக்கி ஆதீனங்கள் வருவதை வைத்து தான் தர்மம் செய்து வருகிறோம்.

கோவில்களில் சிலை திருட்டு அதிகமாக உள்ளது குறித்த கேள்விக்கு, கோவில்களில் பாதுகாப்பு மணிகள், கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. பொன்.மாணிக்கவேல் இருந்தபோது அவர் சொன்னது போல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம். அரசாங்கம் தான் சிலை திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நன்கொடையாளர்களிடம் பணம் வாங்குவது கோவிலில் நல்ல காரியங்களை செய்வதற்காகவே. அதனால் நன்கொடையாளர்களை கோவிலுக்குள் சிறப்பு செய்கிறோம். ஆதீன மடங்கள் புயல், வெள்ளம் வரும் போது பண உதவி, நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பியுள்ளோம் என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.