ETV Bharat / state

திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளது - செல்லூர் ராஜூ - Minister sellur raju

மதுரை: வேலூர் தொகுதியில் சிறுபான்மை மக்களை திசை திருப்பி குறுக்கு வழியில் திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

sellur raju
author img

By

Published : Aug 11, 2019, 6:05 AM IST

மதுரை மாடக்குளம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள 5ஆயிரம் ஏரிகள், குளங்கள் முதலமைச்சர் நிதியில் தூர் வாரப்பட்டு மழைநீர் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட்டு வருகிறது.

மாடக்குளம் கண்மாயை சீரமைப்பதன் மூலம் திருப்பரங்குன்றம், மதுரை உட்பட பல பகுதிகள் பயன்பெறும் என தெரிவித்தார். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.

எனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்தது யாராக இருந்தாலும், அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் எவ்வித தயவு தாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரித்தார். மேலும் வைகை அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

தொடர்ந்து பேசிய அமைச்சர், வேலூர் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகனும் மட்டுமே பரப்புரை செய்தனர். வேறு பெரிய தலைவர்கள் யாரும் பரப்புரை செய்யவில்லை. இதுவே அது குடும்ப கட்சி என்பதை தெளிவுபடுத்துகிறது. அதிமுக தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றியதால் தான் வேலூர் தொகுதியில் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகள் பெற்றோம்.

திமுக, பாஜகவுடன் சேர துடிக்கிறது என குற்றம்சாட்டிய அவர் வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி இல்லை. சிறுபான்மையினரை திசை திருப்பி குறுக்கு வழியில் பெற்ற வெற்றி ஆகும் என்றார்.

Intro:மதுரை மாடக்குளம் கண்மாய் ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைத்தல் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி துவங்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்மாய் ஆயக்கட்டு 2576 ஏக்கர். கண்மாய் கரை நீலம் 3500 மீட்டர் ஆகும். கண்மாயில் மொத்தம் 3 மதகுகள் மற்றும் | மறுகாலும் உள்ளது.
Body:மதுரை மாடக்குளம் கண்மாய் ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைத்தல் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி துவங்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்மாய் ஆயக்கட்டு 2576 ஏக்கர். கண்மாய் கரை நீலம் 3500 மீட்டர் ஆகும். கண்மாயில் மொத்தம் 3 மதகுகள் மற்றும் | மறுகாலும் உள்ளது.

இக்கண்மாயில் குடிமராமத்து பணி மூலம் பலப்படுத்துதல் வரத்து வாய்க்கால் தூர் வாருதல் தடுப்பு சுவர் கட்டுமான செய்தல் மற்றும் எரிகற்கள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் முதலமைச்சர் நிதியில் தூர் வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் சேமிக்க வழி வகை செய்யப் பட்டுள்ளது. மழை காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்கப் பட்டு வருகிறது.

85 லட்சம் ரூபாய் செலவில் இந்த மாடக்குளம் கண்மாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருப்பரங்குன்றம், மதுரை உட்பட பல பகுதிகள் பயன் பெறும். 3400 மீட்டர் நீளமும், 3 மறுகால்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

11 கி.மீ தூரம் நீர் வரும் சாலை இப்பகுதி விவசாயிகளின் துணையோடு சீரமைக்கப்படும். இந்த பகுதியில் நீர் நிலைகளில் யாராவது பட்டா வாங்கி இருந்தால், தயவு தாட்சண்யமின்றி அந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.

சென்னையில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டதற்கு இது போன்ற ஆக்கிரமிப்புகள் தான் காரணம். அதனால் யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி, அரசியல் குறுக்கிடுகள் இருந்தாலும் அகற்றப்படும்.

வைகை அணை தூர் வாருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில்,

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி இல்லை. சிறுபான்மையினரை திசை திருப்பி குறுக்கு வழியில் பெற்ற வெற்றி

அ.தி.முகவின் வாக்கு வங்கி எவ்வித பாதிப்பும் இல்லை.திமுகவில் ஸ்டாலினும் அவரது மகனும் மட்டும் தான் பிரசாரம் செய்தனர். வேறு பெரிய தலைவர்கள் பிரசாரம் செய்யவில்ைல் . இதுவே அது குடும்ப கட்சி என்பதை தெளிவு படுத்துகிறது.

அதிமுகவில் சென்ற 39 உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டனர். திமுக. பா.ஜ வுடன் சேர்ந்து கொள்ள துடிக்கிறது. உண்மையிலேயே அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலூர் தொகுதியில் பணிபுரிந்தனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.