கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா உள்ளிட்டவற்றில் மதுபான கடைகள் திறக்காமல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மதுபான கடை தான் வருமானத்திற்கு வழி என்று தமிழ்நாடு அரசு கூறுவது வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் முதல் ஆளாக மது வாங்கி சென்ற ஸ்பெயின் நாட்டவர்!