மதுரை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் தவசி. பெரிய கடா மீசை, மதுரை வட்டார மொழி வழக்கு என ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட இவர் சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சக கலைஞர்களிடம் உதவி கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனைக் கேள்விப்பட்ட திருப்பரங்குன்றம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர், மருத்துவர் சரவணன், நடிகர் தவசியின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அவரது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நகைச்சுவை நடிகர் தவசியின் உணவுக்குழாயில் Oesophageal stent பொருத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புற்று நோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய சூரி