ETV Bharat / state

'மேலவளவு சம்பவத்தில் அநீதி இழைப்பது திமுகவும் அதிமுகவும் தான் ' - வழக்கறிஞர் ரத்தினம் குற்றச்சாட்டு! - Madurai District News

மதுரை: மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றாய் தான் செயல்படுகின்றன என்று வழக்கறிஞர் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

படுகொலை
author img

By

Published : Nov 21, 2019, 8:30 AM IST

மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் 13 பேர் தமிழ்நாடு அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவில் கடந்த 1997ஆம் ஆண்டு வரை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வந்தார்கள். திமுகவிலிருந்த முருகேசன் என்பவர், அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நின்றார்.

இரண்டு மனநிலையிலிருந்த முருகேசன் அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த பிறகு, அவரது வலியுறுத்தலின் பேரில் அத்தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அவ்வூரிலிருந்த ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட நபரின் தலைமையின் கீழ், இந்தக் கிராமம் இயங்க வேண்டுமா என பெரும் வன்மத்தில் இருந்தனர்.

கொலையான முருகேசன்
கொலையான முருகேசன்

பிறகு சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியினர், 1997ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்த முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 41 பேருக்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நடைபெறும்போதே ஒருவர் இறந்துவிட்டார்.

படுகொலையானவர்களுக்காக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம்

அதற்குப் பிறகு அதிமுக, திமுக என தமிழ்நாட்டில் ஆட்சி பீடங்கள் மாறினாலும், வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்தினோம். சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான எங்களது போராட்டம் பல்வேறு வகையில் நடைபெற்றது.

அக்காலகட்டத்தில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட் நபர்களில் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து நடைபெற்ற வழக்கில், 23 பேரையும் தண்டிக்கின்ற அளவிற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதியது. அதிமுகவைப் பொறுத்தவரை குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் முனைந்து நின்றது. திமுக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வில்லை.

வழக்கறிஞர் ரத்தினம் பேட்டி - 1

மேலவளவு சம்பவத்தில் படுகொலையானவர் திமுகவைச் சேர்ந்தவராக இருந்தபோதும்கூட, இந்த வழக்கில் அக்கறையின்றிதான் அக்கட்சி இருந்தது. அண்ணா நூற்றாண்டு விழாவின் போது தமிழக சிறைகளிலிருந்த 1,400க்கும் மேற்பட்டோர் விடுதலையானார்கள். அவர்களில் மூன்று பேர் மேலவளவு படுகொலைச் சம்பவக் குற்றவாளிகள் ஆவர். இதனை உதாரணமாகக் காட்டியே தற்போதுள்ள 13 பேர் விடுதலை பெற்றனர்.

வழக்கறிஞர் ரத்தினம் பேட்டி - 2

இது சட்டவிரோதமானது. ஆயுள் தண்டனை பெற்றவர்கள், அவர்களது ஆயுள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த விடுதலையால் ஆட்சியின் மீதும், நீதி நடைமுறையின் மீதும் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு இதுவே ஊக்கமாக அமைந்துவிடாதா? இது ஆபத்தானது.

வழக்கறிஞர் ரத்தினம் பேட்டி - 3

போலிச் சாமியார் பிரேமானந்தா வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு ஆயுள் முடிந்ததும் மற்றொரு ஆயுள் தண்டனை தொடரும் என்பதுதான் இதன் நீதி. இதனால் சிறையிலேயே பிரேமானந்தாவின் ஆயுள் முடிந்தது. கொடூரமான கொலைகளில் இதுபோன்ற சட்டநடைமுறைகள் இங்கு பின்பற்றப்பட்டுள்ளன. இங்கு நடைபெறுகின்ற அரசுகள் சாதிக்கானவையாகத்தான் உள்ளன.

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று பெண்களைக் கொலை செய்தவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றி ஆயுள் தண்டனையாக்கி, பிறகு அதிமுக அரசு விடுதலை செய்தது. அரசு என்பது காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டிக் கொண்ட நிறுவனம் என்பதுதான் உண்மை. கொடூரம் செய்பவர்களைப் பாதுகாக்கின்ற அரசுகளாகத்தான் இருக்கின்றன' என்றார்.

வழக்கறிஞர் ரத்தினம் பேட்டி - 4

இதையும் படிங்க:மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Intro:'மேலவளவு சம்பவத்தில் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான்' - வழக்கறிஞர் ரத்தினம் சிறப்புப் பேட்டி

மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றாய்த்தான் செயல்படுகின்றன என்று வழக்கறிஞர் ரத்தினம் குற்றம் சாட்டினார்.Body:'மேலவளவு சம்பவத்தில் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான்' - வழக்கறிஞர் ரத்தினம் சிறப்புப் பேட்டி

மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றாய்த்தான் செயல்படுகின்றன என்று வழக்கறிஞர் ரத்தினம் குற்றம் சாட்டினார்.

மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் 13 பேர் தமிழக அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர்களின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வழக்கை இடைவிடாமல் நடத்தில் வரும் வழக்கறிஞர் ரத்தினம் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது, 'மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவில் கடந்த 1997 வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல்தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வந்தார்கள். திமுக-விலிருந்த முருகேசன் என்பவர் அங்கு உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நின்றார்.

இரண்டு மனநிலையிலிருந்த முருகேசன் அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்த பிறகு, அவரது வலியுறுத்தலின் பேரில் அத்தேர்தலில் நின்றார். வெற்றியும் பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அவ்வூரிலிருந்த ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட நபரின் தலைமையின் கீழ் இந்தக் கிராமம் இயங்க வேண்டுமா என பெரும் வன்மத்தில் இருந்தனர்.

பிறகு சரியான தருணம் பார்த்து பேருந்துக்குள் வைத்து படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 41 பேருக்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நடைபெறும்போதே ஒருவர் இறந்துவிட்டார்.

அதற்குப் பிறகு அதிமுக, திமுக என தமிழகத்தின் ஆட்சி பீடங்கள் மாறினாலும், வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்தினோம். சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான எங்களது போராட்டம் பல்வேறு வகையில் நடைபெற்றது.

அக்காலகட்டத்தில் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட் நபர்களில் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து நடைபெற்ற வழக்கில், 23 பேரையும் தண்டிக்கின்ற அளவிற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதியது. அதிமுகவைப் பொறுத்தவரை குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் முனைந்து நின்றது. திமுக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை.

மேலவளவு சம்பவத்தில் படுகொலையானவர் திமுக-வை சேர்ந்தவராக இருந்தபோதும்கூட, இந்த வழக்கில் அக்கறையின்றிதான் அக்கட்சி இருந்தது. அண்ணா நூற்றாண்டு விழாவின்போது தமிழக சிறைகளிலிருந்த 1400-க்கும் மேற்பட்டோர் விடுதலையானார்கள். அவர்களில் மூன்று பேர் மேலவளவு படுகொலைச் சம்பவக் குற்றவாளிகளாவர். இதனை உதாரணமாகக் காட்டியே தற்போதுள்ள 13 பேர் விடுதலை பெற்றனர்.

இது சட்டவிரோதமானது. ஆயுள் தண்டனை பெற்றவர்கள், அவர்களது ஆயுள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த விடுதலையால் ஆட்சியின் மீதும், நீதி நடைமுறையின் மீதும் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு இதுவே ஊக்கமாக அமைந்துவிடாதா? இது ஆபத்தானது.

போலிச் சாமியார் பிரேமானந்தா வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு ஆயுள் முடிந்ததும் மற்றொரு ஆயுள் தண்டனை தொடரும் என்பதுதான் இதன் நீதி. இதனால் சிறையிலேயே பிரேமானந்தாவின் ஆயுள் முடிந்தது. கொடூரமான கொலைகளில் இதுபோன்ற சட்டநடைமுறைகள் இங்கு பின்பற்றப்பட்டுள்ளன. இங்கு நடைபெறுகின்ற அரசுகள் சாதிக்கானவையாகத்தான் உள்ளன.

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று பெண்களைக் கொலை செய்தவர்களை தூக்குத்தண்டனையிலிருந்து காப்பாற்றி ஆயுள்தண்டனையாக்கி, பிறகு அதிமுக அரசு விடுதலை செய்தது. அரசு என்பது காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டிக் கொண்ட நிறுவனம் என்பதுதான் உண்மை. கொடூரம் செய்பவர்களைப் பாதுகாக்கின்ற அரசுகளாகத்தான் இருக்கின்றன' என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.