மதுரை: இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பெயரில் போலியான காசோலை தயாரித்து, பண மோசடி செய்த ஆசைத்தம்பி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட குற்றவியல் காவல்துறை தரப்பில், இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால், தற்போது பிணை வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
முகுல் ரோத்தகி பெயரில் பண மோசடி
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆசைத்தம்பி பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கலாம்