கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக நாளை (ஏப். 9) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசு சார்பில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்து பயணத்தின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க : சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு