மதுரை விமான நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அறவழியில் போராடுவது சரி என்றும், ஆனால் அறவழியை மீறி போராடுவது சரியல்ல என்றார். ஆளுநர் செல்லும் வழியில் அறவழியை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதா விரும்பி வசித்த கோடநாடு பங்களாவில் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தால் மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார். கோடநாடு விசாரணையில் சசிகலா முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க :சசிகலா பினாமிகளின் சொத்து குறித்த வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு