ETV Bharat / state

அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் - அமைச்சர் செல்லூர் ராஜூ - வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயிர் கடன்கள் தள்ளுபடி

மதுரை: ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

minister sellur raju
minister sellur raju
author img

By

Published : Feb 6, 2021, 4:24 PM IST

மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "10 ஆண்டுகளில் 1 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் அதிமுக அரசால் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 33 ஆயிரத்து 590 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது போல விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் திமுக 5 ஆயிரத்து 360 விவசாய கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்தது. திமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவே பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் வரலாற்றில் இல்லாத அளவில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர்

பயிர்க்கடன்கள் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசிதழில் அரசாணை வெளியிடப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 281 கோடி ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விவசாய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதலமைச்சர் அனைத்து பந்துகளையும் சிக்ஸராக அடித்து வருவதால் ஸ்டாலின் புலம்பி வருகிறார்" எனக் கிண்டல் அடித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.