ETV Bharat / state

தனியார் தொலைக்காட்சியில் 'தர்பார்' - ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

மதுரை: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சம்பவம் ரஜினி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

darbar
darbar
author img

By

Published : Jan 13, 2020, 8:39 PM IST

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் நாடு முழுவதும் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

darbar
தனியார் தொலைக்காட்சியில் 'தர்பார்'

பல கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது, மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை அந்த ஊரை சேர்ந்த மக்கள் லைகா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தது. அந்த குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியின் அலுவலகம் மதுரை காளவாசல் பகுதியில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து காவல் துறையினர் அந்த அலுவலக உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Intro:தனியார் தொலைக்காட்சியில் தர்பார் - மதுரையில் பரபரப்பு

மதுரையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தர்பார் படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி. லைகா நிறுவனம் மதுரை மாநகர காவல் துறையிடம் புகார்.Body:தனியார் தொலைக்காட்சியில் தர்பார் - மதுரையில் பரபரப்பு

மதுரையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தர்பார் படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி. லைகா நிறுவனம் மதுரை மாநகர காவல் துறையிடம் புகார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 9-ஆம் தேதி முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் நாடு முழுவதும் ரஜினியின் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பல கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது, மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோக்களை அந்த ஊரை சேர்ந்த மக்கள் லைகா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்,

அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தது. அந்த குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியின் அலுவலகம் மதுரை காளவாசல் பகுதியில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த அலுவலக உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.