கரோனா அச்சுறுத்தல் காரணமாக, 144 தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், 500 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர், 144 தடை உத்தரவு அமலுக்குவந்த பின்னர், பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த நபர்களைச் சோதனை செய்தபோது, ஆறு வெவ்வேறு இடங்களில் விற்பனைக்காக மதுபாட்டில் வாங்கிச் சென்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் மதுபாட்டில் கடத்திச் சென்ற ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 500 மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்தனர்.
இவர்கள் அனைவரும் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இந்த ஆறு நபர்களில் சுரேஷ், குமார் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை' - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்