மதுரையில் இன்றிலிருந்து(ஜூலை 15) தீவிர ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வழக்கம் போல் காலை 6 மணி தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்துவிதமான கடைகளும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று(ஜூலை 15) காலை 6 மணி முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. ஆனாலும், பொதுமக்களைப் பொறுத்தவரை தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதில் இன்னும் தொய்வு நிலையே நிலவுகிறது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை, மதுரையில் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமாக விழிப்புணர்வு பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தியும்; முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றைத் தொடர்ந்து நகர் முழுவதும் வலியுறுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி வளாகத்தில் கரோனா மையம்: கிராம மக்கள் எதிர்ப்பு