ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: கஞ்சா விற்ற காவலர் கைது! - Seized 750 grams of cannabis in Madurai

மதுரை: ஊரடங்கு உத்தரவை மீறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் கஞ்சா விற்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்றதாக கைதான காவலர் பிரவீன்
கஞ்சா விற்றதாக கைதான காவலர் பிரவீன்
author img

By

Published : Apr 22, 2020, 11:49 AM IST

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், அங்கு கஞ்சா விற்கப்படுவதாகவும் சமயநல்லூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது

இதனையடுத்து சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில், காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரவீன்(26), மீண்டும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல் துறை அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் கஞ்சா விற்றதாக கைது

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.