ETV Bharat / state

காவல் துறை சித்ரவதை படுகொலைகளில் கண்காணிப்பு முறை தீவிரமாக வேண்டும் - ஹென்றி டிபேன் - மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன்

மதுரை: காவல் துறை சித்ரவதை - படுகொலை சம்பவங்களில் நீதித் துறை, காவல் துறை, மருத்துவத் துறை ஆகியவற்றின் கண்காணிப்பு முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.

hendri
hendri
author img

By

Published : Nov 17, 2020, 4:14 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைதாகி விருதாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் செல்வமுருகன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நெய்வேலி காவல் துறையினர் அடித்து சித்ரவதைசெய்து கொலைசெய்தாக செல்வமுருகனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், சிறையில் உயிரிழந்த செல்வ முருகனின் வழக்கை மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் அவர்கள் சில பரிந்துரைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்பட்ட நேரம் ரிமான்ட் செய்யப்பட்ட ஆகியவற்றை காவல் நிலையத்திற்குப் பொறுப்பான அலுவலர் உன்னிப்பாகக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.

முக்கிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரை இரவு நேரங்களில் ரிமாண்ட் செய்யப்பட்டால் அதை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய பின்னரே ரிமான்ட் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைச் சம்பவத்தைப் போன்றே நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் வியாபாரி முருகன் சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஹென்றி டிபேன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும்கூட இதுபோன்ற நடைபெறுவது காவல் துறையின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. இச்சம்பவத்தில் எங்களது உண்மையைக் கண்டறியும் குழு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அவை அனைத்துமே சாத்தான்குளத்தில் என்ன நடந்ததோ அதே போன்று நெய்வேலியிலும் நடந்திருப்பதை உறுதிசெய்கிறது.

காவல் துறையில் பல்வேறு நடைமுறைகளை கோட்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றங்களில் மாநில காவல் துறை தலைவர் கூறுகின்ற இந்த நேரத்தில்தான் நெய்வேலியில் சித்ரவதை படுகொலை நிகழ்ந்துள்ளது. மருத்துவத் துறை சிறைத் துறை நீதித் துறை அனைத்தும் காவல் துறையுடன் இணைந்து இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

முந்திரி வியாபாரி செல்வமுருகன் எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத ஒரு நபராவார். ஆனால் அவர் திருட்டு தொழில் செய்து குடும்பத்தை நடத்துகிறார் எனக் காவல் துறை அபாண்டமாக இழிவுபடுத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று விருதாச்சலம் கிளைச் சிறையில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

இது குறித்து எங்களது உண்மை கண்டறியும் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தச் சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கிறோம்.

இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல் துறையினரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். மருத்துவப் பரிந்துரை அளித்த டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் தினகரன் ஆகியோர் மீது மருத்துவ சேவை துறை இணை இயக்குநர் விசாரணை நடத்த வேண்டும். மருத்துவத்துறை காவல்துறையினருக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது போன்று ஒரு சூழலை இவர்கள் உருவாக்குகிறார்கள்.

சிறைத்துறை டிஐஜி வியாபாரி செல்வ முருகனுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைப்போன்று செல்வமுருகன் உடற்கூறு ஆய்வு அறிக்கையையும் அது குறித்த வீடியோ பதிவுகளையும் அவரது மனைவி பிரேமாவுக்கு உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

அதேபோன்று நெய்வேலி நீதித்துறை நடுவர் மீது உடனடியாக விசாரணை நடத்த தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும். அனைத்து நீதித்துறை நடுவர்களுக்கும் சித்திரவதைக்குள்ளான கைதுகள் நீதி முன்பாக நேர் நிறுத்தப்படும்போது சில சிக்கல்கள் உள்ளன.குறிப்பாக பெரும்பாலான நீதித்துறை நடுவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தால் இரவு நேரத்தில் தங்களது வீடுகளிலேயே அவர்களால் கைதிகள் குறித்து ஆய்வு செய்ய முடிவதில்லை. இதற்கு உரிய நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று காவல்துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவிலும் சில நடைமுறைகள் தேவைப்படுவதாக உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடைபெறக்கூடிய இதுபோன்ற விஷயங்களை மாநில காவல் துறைத் தலைவர் நுண்ணறிவு பிரிவின் ஆலோசனைப்படி நடைபெறவேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாடு சட்ட உதவிகள் ஆணையம்இதுபோன்ற காவல்துறை சட்டவிரோத சித்திரவதை படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க கூடிய மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.