ETV Bharat / state

சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை - நீதிபதிகள் - சென்னை உயர் நீதிமன்றம்

மதுரை: ஊழல் செய்யும் அரசு அலுவலர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்த கோரிய வழக்கில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை
மதுரை
author img

By

Published : Jan 19, 2021, 12:38 PM IST

திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவில் உள்ள மக்கள் வருமான வரி, சேவை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஜி.எஸ்.டி ஆகியவை செலுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பணத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். பல்வேறு தரப்பட்ட ஊழல்கள் அரசுத் துறைகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வருவாய் துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத் துறை, வணிகத்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றின் மிக பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

ஊழல் செய்யும் அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுத்துறையினர் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. 2021 மே மாதம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது.

அதற்கு முன்பாக ஊழல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள் வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் சட்டத்திருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறி சட்டம் இயற்றும் அதிகார கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.