ETV Bharat / state

கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறை: நிதித்துறை செயலாளரிடம் நீதிமன்றம் கேள்வி? - மதுரை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை தடை செய்யக் கோரிய வழக்கில் நிதித்துறை செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதித்துறை செயலாளரிடம் நீதிமன்றம் கேள்வி?

author img

By

Published : Nov 12, 2020, 1:58 PM IST

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "தமிழ்நாட்டில் கருவூலங்களில் Automated Treasury Bill Passing System (ATBPS) முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலை 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதித்துறை மூலம் புதிதாக Integrated Financial Management and Human resource Management System (IFHRMS) என்ற முறையை விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த முதற்கட்ட பணிகள் தொடங்கின.

இதன் மூலம் கருவூலங்களில் வழங்கப்படும் ஊதியங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திற்கு 2 ஆயிரம் கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் முறையானது முதல் கட்டமாக ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது.

இதில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதால் 20 சதவீதம் பென்ஷன் பணம் சரியான கணக்கிற்கு சென்று சேரவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் பழைய சாப்ட்வேர் முறையைப் பின்பற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு நீதித்துறை செயலர் மற்றும் கருவூல ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ஆபாசம் நிறைந்த விளம்பரங்களுக்கு இடைக்கால தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.