கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் குறைவால் இறக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக காலை நேரங்களில் ஹைபாக்சியா குறைபாட்டால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
அதிலும், மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் கழிவறைக்குச் செல்லும்போது எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் வகையில் கழிவறையில் பிராணவாயு குழாய் பொருத்தப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் முறையை அரசு ராசாசி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. கழிவறை வாசலிலும், உள்ளேயும் குழாய் பொருத்தப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அரசு ராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயம்பேடு காய்கறி சந்தை நாளை திறப்பு - துணை முதலமைச்சர் அறிவிப்பு