மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் அருகே உள்ள எல்ஐசி காலனியில் மக்கள் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீடுகளில் மஞ்சள் நீர் தெளித்தும், வேப்பிலைத் தோரணங்களைக் கட்டியும் உள்ளனர்.
மேலும், தெருக்களில் தண்ணீர் லாரியை வரவழைத்து, அதில் மூலிகை மஞ்சள் பொடியைக் கலந்து, தெரு முழுவதும் தெளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரிய நோய் தடுப்பு முறைதான் இந்த மஞ்சள் நீரும் வேப்பிலைத் தோரணமும்.
அம்மை நோய் தாக்கும்போது இதனை வழக்கமாக நாம் செய்துவருகிறோம். மஞ்சள் பொடியின் மூலம் தீராத நோயின் தீவிரமும் குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அதனைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீடுகளின் முன்பாக மஞ்சள் தெளித்துவருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறி: திருச்சியில் 3 வயது குழந்தை உள்பட இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி