ETV Bharat / state

தாய்லாந்திலிருந்து மதுரை வந்திருந்த மூவருக்கு கரோனா அறிகுறி - தாய்லாந்து நாட்டுக்காரர்களுக்கு கரோனா அறிகுறி

மதுரை: தாய்லாந்திலிருந்து மதுரை வந்திருந்த மூன்று பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

corona
corona
author img

By

Published : Mar 25, 2020, 3:01 PM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தனிப்பிரிவில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்கள் கரோனா அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரோடு சேர்ந்து சொற்பொழிவாற்றிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள்தான்.

தாய்லாந்து நாட்டுக்காரர்களுக்கு கரோனா

இவர்கள் மூன்று பேரிடமிருந்துதான் அவருக்கு கரோனா தொற்று வந்திருக்க முடியும் எனச் சுகாதாரத் துறை சந்தேகித்துவருகிறது. மதுரையின் புறநகர்ப் பகுதியில் தங்கியிருந்த இந்தத் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் முழு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டதில் மூவருக்கும் கரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கரோனா வைரஸ் தனிப்பிரிவில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டவர்களைச் சேர்த்து மொத்தம் 15 பேர் கரோனா தனிப்பிரிவில் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.