மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று(செப்.26) ஒரேநாளில் 81 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,287ஆக உயர்ந்துள்ளது.
இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 181 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பலனின்றி 385 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வழக்கறிஞரை தாக்கிய காவல்துறை: உள்துறை செயலாளர் - டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு