ETV Bharat / state

மதுரையைக் கலக்கும் கரோனா பால்: சாயா கருப்பட்டி காபி கடையின் பாரம்பரிய முறை! - jaggery milk at madurai

ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் நிலையில், மதுரை அருகே கரோனா பால் விற்பனை செய்து அசத்திவருகிறார் இளைஞர் சாலமோன் ராஜ்.

மதுரையைக் கலக்கும் கரோனா பால்!
மதுரையைக் கலக்கும் கரோனா பால்!
author img

By

Published : Dec 4, 2021, 7:58 AM IST

Updated : Dec 4, 2021, 8:04 AM IST

மதுரை: ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் நிலையில், மதுரை அருகே கரோனாவின் பெயரில் கரோனா பால் விற்பனை செய்து அசத்திவருகிறார் சாலமோன் ராஜ். சீனாவிலிருந்து பரவிய கரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், அதற்கான தடுப்பூசிகளின் மூலமாக மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு உலகமே திரும்பிக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசிலிருந்து உருமாறிய ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா எனப் பல்வேறு வைரஸ்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்திவருகின்றன.

சாயா கருப்பட்டி காபி கடை - கரோனா பால்

இந்நிலையில் மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாயா கருப்பட்டி காபி என்ற கடையில் கரோனா பால் தற்போது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், "கருப்பட்டியை மூலப்பொருளாக வைத்து குளம்பி (காபி), தேநீர், பால் என விற்பனை செய்துவருகிறோம்.

சாய கருப்பட்டி காப்பி கடையின் விற்பனைப் பலகை
சாயா கருப்பட்டி காபி கடையின் விற்பனைப் பலகை

இது நமது பாரம்பரியமான முறையாகும். சீனி பயன்படுத்தும் நடைமுறை மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகும். ஆனால், அது நமது உடலுக்கு கேடு விளைவிப்பது. ஆனால், பனங்கருப்பட்டி, நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து மட்டுமன்றி நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வழங்கவல்லது.

அதனால் இங்கு காபி, பால், தேநீர் ஆகியவற்றுக்கு கருப்பட்டியையும், நாட்டுச் சக்கரையையும் பயன்படுத்துகிறோம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. கரோனா காலம் என்பதால், கரோனா பால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

நியாயமான விலை, சுகாதாரமான பொருள்

பாலில், மிளகு, மஞ்சள் தூள், சுக்கு ஆகியவற்றுடன் கருப்பட்டியையும் கலந்து விற்பனை செய்கிறோம். இதனை மக்கள் வெகுவாக விரும்பி அருந்துகின்றனர். இது தவிர காலையும் மாலையும் பல்வேறு வகையான பயறு வகைகளையும் விற்பனை செய்கிறோம். கடலை எண்ணெயில் பொரிக்கப்பட்ட உளுந்து வடையும் விற்பனைக்கு உள்ளது.

மதுரையைக் கலக்கும் கரோனா பால்

மக்களுக்கு நியாயமான விலையில், ஆரோக்கியமான பொருளை விற்பனைக்குத் தருகிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி" என்கிறார். மிகச் சிறிய கடைதான் என்றாலும், அச்சம்பத்து பகுதியைக் கடந்துசெல்கின்ற நபர்கள் பெரும்பாலும் இதன் கருப்பட்டி காபியை மட்டுமன்றி கரோனா பாலையும் ஒருமுறை ருசித்துவிட்டேச் செல்கின்றனர்.

மதுரையைக் கலக்கும் கரோனா பால்
மதுரையைக் கலக்கும் கரோனா பால்

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அதிரடி...

Last Updated : Dec 4, 2021, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.