மதுரை : கரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மலர் சந்தையை மூட மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :பழனி கோயில் முன் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்