ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை வைகை ஆற்றின் அருகே சாலை அமைத்தும் ஆற்றை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓபுளா படித்துறை அருகே பணியை முடித்துவிட்டு மூன்று ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக காங்கிரீட் லாரி பின்நோக்கி வந்து, தூங்கிக்கொண்டிருந்த மூவர் மேல் ஏறியது. இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், பெரியசாமி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த பாலு என்ற இளைஞர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் ஆரோக்கியசாமியை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரிப் பேருந்து மீது லாரி மோதியதில் 50 மாணவர்கள் காயம்