ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒடிசா ரயில் விபத்து போன்ற சதிகள் நடைபெற வாய்ப்பு - ஹெச்.ராஜா - H raja about Train accident

ஒடிசா ரயில் விபத்து போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிறைய ரயில் விபத்துகள் சதிவேலையால் நடக்க வாய்ப்பு உள்ளது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 8, 2023, 6:32 AM IST

Updated : Jun 8, 2023, 3:19 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒடிசா ரயில் விபத்து போன்ற சதிகள் நடைபெற வாய்ப்பு - ஹெச்.ராஜா

மதுரை: எஸ்.எஸ்.காலனியில் நேற்று (ஜூன் 7) பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஹெச்.ராஜா பேசுகையில், "இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு தொடரக் கூடாது. தன்னைக் கிறிஸ்தவராக எண்ணிக் கொள்ளும் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறையில் அமைச்சராக நீடிப்பது சரி அல்ல. அவருக்குப் பதிலாக கே.என்.நேருவை அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர். அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்.

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை இந்து மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அன்றி வேறு எதற்காகவாவது பயன்படுத்தப்பட்டால், அதன் பெயரில் நிச்சயமாக வழக்கு தொடுப்போம். அவ்வாறு செயல்களில் தொடர்புடையவர்கள் அந்த வழக்கை நிச்சயம் எதிர்கொண்டாக வேண்டும்.

தமிழ்நாடு மாநிலக் கல்வி தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே, அது தொடர்பாக இன்றை காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஆளுநர் பேசியதில் தவறில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தனது மாப்பிள்ளை சபரீசனை காப்பாற்றவே வெளிநாடு சுற்றுலா சென்றார். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றது முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல.

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள், ஏன் விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழ்நாடு டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர்.

அனிதா உயிரிழந்தபோது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தந்தை குடிப் பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர், மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடி இருக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதி வேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. அடுத்த வருடம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன் வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்டுகளை வைத்து இன்னும் நிறைய சதி வேலைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது" என கூறினார்.

முன்னதாக, ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்றனர். அதேநேரம், ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Kalaignar Centenary Library: மதுரையில் தயாராகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் - ஆயிரம் புத்தகங்கள் நன்கொடை

Last Updated : Jun 8, 2023, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.