மதுரை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் (Chartered accountant) படித்து வந்துள்ளார். மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச.17, 18 ஆகிய தேதிகளில் மதுரையில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதற்காக மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
அதே விடுதியில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அஷீஷ் ஜெயின் (22) என்ற இளைஞரும், காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் (22) ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர். இரண்டு நண்பர்களும் மாணவியோடு அறிமுகமாகி பின்னர் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.
இது குறித்து மாணவி குஜராத் சென்ற பின்பு ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் இரண்டு மாணவர்களையும் மதுரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஜெரோம் கதிரவன், தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கடந்த 2022 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்றதாகவும் மாணவி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் கொடுத்துள்ளார். புகாரில் முகாந்திரம் இல்லை பொய்யான புகார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி மாணவன் ஜெரோம் கதிரவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
மேலும், மாணவர் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை இருவேளை கையெழுத்து போட வேண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது நீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமென நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: கடல் அரிப்பை தடுக்க செயற்கை பாறை: மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!