ETV Bharat / state

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி துறைத்தலைவர் மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி துறை தலைவர் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி துறைத்தலைவர் மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்!

author img

By

Published : Jun 30, 2022, 2:06 PM IST

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் பொருளாதாரப்பிரிவு துறைத்தலைவர் ரெஜினா, மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகவும் மாணவி ஒருவர் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், துறைத்தலைவருக்கு எதிராக புகார் அளித்த மாணவர்களை தேர்வு எழுத விடாமல், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ள மாணவி, துறை தலைவர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

அதேநேரம், இதே கல்லூரி பொருளாதார பிரிவு துறைத்தலைவர் மீது ஏற்கனவே உயர்கல்வித்துறை மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.. இந்நிலையில், மாணவ மாணவியர்கள் தொடர்பான புகார் குறித்து விசாரணைக்குழு அமைப்பதாக கூறப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி துறைத்தலைவர் மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி துறைத்தலைவர் மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்!

ஆனால் இதுவரை விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என கல்லூரி மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு கல்லூரியில் துறைத்தலைவர் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் புகாராக அளிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கழிவறைக்கு சென்ற பெண்களை செல்போனில் படம்பிடித்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.