ETV Bharat / state

மருத்துவக் கழிவுகளை எரிப்பதால் மூச்சுத் திணறல்: பிரபல மருத்துவமனை மீது புகார் - madurai hospital

மதுரையில் பிரபல மருத்துவமனை ஒன்று மருத்துவக் கழிவுகளை மருத்துவமனையின் பின்புறம் எரிப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மருத்துவ கழிவு
மருத்துவ கழிவு
author img

By

Published : Oct 15, 2020, 7:41 AM IST

மதுரை பாண்டி கோயில் பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே பிரபல மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. அம்மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் மருத்துவக் கழிவுகளை மொத்தமாக வைத்து தரம் பிரித்துவரும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு மருத்துவமனை கழிவுகளை ஊழியர்கள் தீயிட்டு எரித்ததால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவக்கழிவுகளை எரிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பிடம் கேட்டபோது, வெறும் மரக் கழிவுகளையும், அட்டைகளையும் எரிப்பதாகக் கூறினர், இருப்பினும் இது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் கரோனாவிலிருந்து 16,505 பேர் மீண்டனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.