ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா நீதித்துறையின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு, வழக்கறிஞர் கார்மேகம் புகார் மனுவினை அனுப்பியுள்ளார்.
அதில், "ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது உதவி காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நீதித்துறை நடுவர் ஜெனிதா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு, பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட ரகசிய கடிதத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியுள்ளார்.
இது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தொழிலாளியை கடுமையாகத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்!