இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட வேட்பாளர் சு.வெங்கடேசன், எங்கள் அறிக்கையில் இல்லாதவற்றை தான் பேசியதாகவும், குறிப்பாக மதுரையின் சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா மற்றும் கார்த்திகை தீபம் குறித்து தான் தவறாகப் பேசியதாகவும் பாஜக கட்சியினர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருவதாகக் குற்றம்சாட்டியனார்.
மேலும், இதே போன்று பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன், அவரது கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உள்ள தேர்தல் பரிவு அலுவலர் மணிமொழியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் பல ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை தபால் வாக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும், அதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி இன்னும் இரண்டு நாட்கள் கடிதம் வந்து சேரும் என்று உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.