மதுரை மாவட்டம் கரடிக்கல் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்கள் அருண்குமார் (27), தேவேந்திரன் (25). இவர்கள் இருவரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தங்களது மாட்டை அவிழ்த்து விடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, மாட்டின் உரிமையாளர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மாட்டின் கயிறை அவிழ்ப்பதற்காக வைத்திருந்த கத்தியை வைத்து அருண்குமார், தேவேந்திரன் ஆகியோரை மற்றொரு தரப்பு குத்தியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிக்கன் ரைஸால் கைதான பாஜக நிர்வாகிகள்