ETV Bharat / state

நீங்க வேணும்னா ஊசி போடாதீங்க: கரோனா தடுப்பூசிகளுக்குத் தடைவித்திக்க முடியாது...! - கரோனா தடுப்பூசிகள்

மதுரை: கரோனாவிற்கான கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai bench
madurai bench
author img

By

Published : Jan 29, 2021, 2:15 PM IST

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜனவரி 3ஆம் தேதி கோவிட் -19 தடுப்பூசிகளின், கட்டுப்பாடுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிசீல்டு எனும் பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் பெயரிலும் தடுப்பூசிகளை விற்பனை செய்ய உள்ளன. தடுப்பூசிகள் தொடர்பாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனையின், இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அவசர அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒருபுறம் சோதனை நடைபெறும் சூழலில் மறுபுறம் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவான அளவு. கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என, 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தீபக் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு, பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்தத் தடுப்பூசிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 29) நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா அவசரகால சூழ் நிலையில் இது போன்ற பொது நல மனுக்கள் ஏற்புடையது அல்ல. மனுதாரர் விரும்பாவிட்டால் போடாமல் இருந்து கொள்ளலாம். அதைவிட்டு மொத்தமாக மருந்துக்கு தடை கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மனுதாரர் தனது மனுவை திருப்ப பெற்று கொள்வதாகக் கூறினார். பின்னர் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.