ETV Bharat / state

அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்! - Southern Railway

மதுரை : தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது அகல பாதை அமைக்கும் பணிகள் நடைபெறவிருப்பதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

author img

By

Published : Mar 3, 2021, 9:47 AM IST

இது குறித்து தென்னக ரயில்வே நேற்று (மார்ச்2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ வண்டி எண் 02605/02606 சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு சிறப்பு ரயில் மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு - சென்னை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 02635/02636 சென்னை - மதுரை - சென்னை வைகை அதிவிரைவு சிறப்பு ரயில் மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 19 ஆம் தேதியன்று கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 02634, கன்னியாகுமரி - சென்னை மற்றும் வண்டி எண் 02206, ராமேஸ்வரம் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல, மார்ச் 19 ஆம் தேதியன்று குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06128 குருவாயூர் சென்னை சிறப்பு ரயில் விழுப்புரம் - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 20 ஆம் தேதியன்று மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 02638, மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 19, 20 ஆகிய இரு நாள்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 02632, திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 20 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 02693, சென்னை - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில், வண்டி எண் 06723 சென்னை - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 21 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06105, சென்னை - திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06851, சென்னை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

மார்ச் 20, 21 ஆகிய இரு நாள்களில் சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 02661, சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 21 ஆம் தேதியன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06127, சென்னை - குருவாயூர் சிறப்பு ரயில் சென்னை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 20 ஆம் தேதியன்றுயன்று தூத்துக்குடி, கொல்லம் மற்றும் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 02694, தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சிறப்பு ரயில், வண்டி எண் 06724, கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில், வண்டி எண் 06106, திருச்செந்தூர் - சென்னை செந்தூர் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கமான தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : காங்கிரஸ் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள் குழு நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.