ETV Bharat / state

இலங்கை தமிழர்களை தங்க வைக்க மத்திய அரசின் முடிவுக்கு காத்திருப்பு - ஜெசிந்தா லாசரஸ் - இலங்கை தமிழர்களை தங்க வைக்க மத்திய அரசின் முடிவுக்கு காத்திருப்பு

இலங்கை தமிழர்களை தங்க வைக்க மத்திய அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்துள்ளார்.

ஜெசிந்தா லாசரஸ் பேட்டி
ஜெசிந்தா லாசரஸ் பேட்டி
author img

By

Published : Mar 25, 2022, 2:12 PM IST

மதுரை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியால் உணவு பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையிலிருந்து செவ்வாய்க்கிழமை 16 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

அவர்கள் மீது உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்த கடலோர காவல்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இலங்கையிலிருந்து உணவுப் பஞ்சம் காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள 16 இலங்கை தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் இல்லாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க தமிழ்நாடு அரசு சிறப்பு ஆணை ஒன்றை வெளியிட்டது.

ஜெசிந்தா லாசரஸ் பேட்டி

அதனடிப்படையில் 16 இலங்கை தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 இலங்கை தமிழர்களிடம் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தேன். இந்தியா வந்துள்ள இலங்கை தமிழர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள். இலங்கை தமிழர்களை முகாம்களில் தங்க வைக்க மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ‘செஞ்சிருவேன்’ மாரி பட டயலாக்கை எஸ்ஐ-க்கு டெடிகேட் செய்த இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.