ETV Bharat / state

இலங்கை சிறையில் உள்ள தமிழரை இந்திய சிறைக்கு மாற்ற கோரி வழக்கு - மத்திய அரசு தகவல்

இலங்கை சிறையில் உள்ள தமிழரை, இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கில், ஜனவரி மாதம் இந்திய சிறைக்கு மாற்றப்படுவார் என இலங்கை தூதரகம் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை
author img

By

Published : Dec 16, 2021, 8:00 PM IST

மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரிபாயுதீன் மீது கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார்.

இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக இன்று (டிச.16) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், மனுதாரரின் கணவரை ஜனவரி மாதம் இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு கொண்டு வரப்படும். இது தொடர்பாக இலங்கை தூதரகம் பதில் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் மகன் குண்டர் சட்டத்தில் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.