ETV Bharat / state

54ஆம் வயதில் கால்பதிக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்! - சிறப்புத் தொகுப்பு - Madurai University

ஏறக்குறைய 12க்கும் மேற்பட்ட துணைவேந்தர்களை அளித்ததுடன், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இன்றளவும் திகழ்கிறது. காலத்தால் மறக்க முடியாத சாதனை கொண்டுள்ளது காமராசர் பல்கலைக்கழகம் குறித்த சிறப்புத் தொகுப்பு!

Celebrating the 54 Years of Madurai Kamaraj University

author img

By

Published : Feb 6, 2020, 12:28 PM IST

தென் மாவட்டங்களின் மாநகரம் என்ற அடையாளத்துடன் இருக்கும் மதுரைக்கு முக்கிய அடையாளமாகத் திகழ்ந்துவருவது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். பிப்ரவரி 6ஆம் தேதியன்று (இன்று) தனது 54ஆம் வயதை அப்பல்கலைக்கழகம் தொடுகிறது. ஆற்றல்சால் பல்கலைக்கழகம் என்று தனது முகப்பில் கம்பீரமான பதிவைக் கொண்டு பல லட்சம் மாணவர்களை உருவாக்கி சமூக மேம்பாட்டிற்கு தன்னுடைய பங்களிப்பை செய்துகொண்டே இருக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

1966ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவச்சலத்தால் தொடங்கப்பட்டு, தற்போதுவரை 20 புலங்களுக்கு உட்பட்ட 77 துறைகளுடன் 44 முதுகலை, 40 எம்.பில், 57 முனைவர் பட்டங்களுக்கான படிப்புகளோடு, 17 பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி மாணவ தலைமுறையின் அறிவுசார் புரட்சிக்கு தொடர்ந்து வித்திட்டுவருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது துணைவேந்தராகப் பொறுப்பு வகித்துவரும் முனைவர் கிருஷ்ணன் பேசுகையில், ”மதுரை காமராசர் பலகலைக்கழகம், பல்கலைக்கழகங்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலுக்குள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தி. உலகத்தில் எங்கேனும் ஓரிடத்திற்குச் செல்ல நேர்ந்தால், இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு மாணவரையேனும் சந்திக்க முடிகிறது” என்கிறார்.

உலகத்தரம் வாய்ந்த நூலகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இயங்கிவருகிறது. நவீன முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைகளோடு இயங்கிவரும் இந்த நூலகத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளன. தற்போது அரிய பல நூல்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதோடு அரிய நூல்களை பொதுமக்களும் வழங்க பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், ”சிறந்து விளங்கும் பேராசியர்களுக்கு வழங்கப்படும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் எனும் தேசிய விருதை ஒரே நேரத்தில் 4 பேராசிரியர்கள் பெற்று சாதனை படைத்தது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமே. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதியைப் பெறுவதே பல்கலைக்கழகத்தின் அடுத்த இலக்கு” என்றார்.

துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன்

மதுரை பல்கலைக்கழகம் என்ற பெயரால் முன்னர் அறியப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசர் பெயரால் மாற்றம் செய்யப்பட்டது. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.செ. குழந்தைசாமி, வ.சுப. மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்களை துணைவேந்தர்களாகக் கொண்டு சிறந்து விளங்கிய பெருமை கொண்ட பல்கலைக்கழகமாகும்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா. திருமலை கூறுகையில், ”மதுரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, தமிழ்நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தராகச் சென்றவர்கள் 12க்கும் மேற்பட்டவர்களாவர். வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் இந்தப் பெருமை கிடையாது. அதேபோன்று எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்காகவே அஞ்சல் வழியில் கல்வி தொடங்கியது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்தான்” என்றார்.

முன்னாள் துணைவேந்தர் மா.திருமலை

கிராமம் சார்ந்து இயங்கிய கல்விச்சாலை என்பதால், பாமர மக்களும் வந்து செல்வதற்கு ஏற்றவாறு மதுரை-தேனி நெடுஞ்சாலையில் காமராசர் பல்கலைக்கழகம் அமைந்ததுடன், அனைத்துத் துறைகளும் அருகருகே அமையுமாறு வடிவமைக்கப்பட்டது. ஏறக்குறைய 650 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இப்பல்கலைக்கழத்திற்கு, நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான பி.டி. ராஜன் தனக்குரிய பெரும்பகுதி நிலங்களை தானமாக வழங்கினார். பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது நிலங்களையும் குறைந்த விலைக்கு வழங்கி சிறப்பு செய்தனர்.

முன்னாள் துணைவேந்தர் மா. திருமலை மேலும் கூறுகையில், ”மதுரையில் தமிழ்நாடு அரசின் சார்பாக 1981ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் உலகத்தமிழ் மாநாட்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மகத்தான பங்களிப்பை வழங்கியது. அச்சமயம் தமிழ் மொழி குறித்த கருத்தரங்குகளும் நூல் வெளியீடுகளும் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றன. அச்சமயம் வெளியான 'உலகத்தமிழ்' எனும் சிறிய நூல் பல்கலைக்கழகத்தின் சிறப்பான பங்களிப்பாகும்” என்றார்.

முன்னாள் துணைவேந்தர் மா.திருமலை

அண்மையில் மின்னணு தகவல் மூல வளங்களை அதிகளவில் தரவிறக்கிப் பயன்படுத்திய பல்கலைக்கழகம் என்ற விருதோடு, கீழடி அகழாய்விலும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையுடன் கைகோத்த்துச் செயல்படத் தொடங்கியுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தன்னை மேலும் மேலும் செம்மைப்படுத்தி தேசிய தரத்திற்கு உயர்த்திக் கொண்டே இருக்கிறது என்றால் அது வெறும் புகழ் மொழியல்ல...!

Intro:உலகத்தரம் வாய்ந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - துணைவேந்தர் கிருஷ்ணன் பெருமிதம்

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் தொடர்ந்து தன்னை தகுதிப்படுத்தி வருகிறது மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் என்று அதன் துணைவேந்தர் கிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டிBody:உலகத்தரம் வாய்ந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - துணைவேந்தர் கிருஷ்ணன் பெருமிதம்

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் தொடர்ந்து தன்னை தகுதிப்படுத்தி வருகிறது மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் என்று அதன் துணைவேந்தர் கிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் பிப்ரவரி 6-ஆம் தேதியன்று 54-ஆவது நிறுவன நாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு, பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் சிறப்புப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், 'இன்று உலகம் முழுவதும் எங்கு பயணம் மேற்கொண்டாலும் என்னை சந்திக்கின்ற நபர்களுள் யாரேனும் ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவராக இருக்கிறார் என்பது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது.

அறிவுசார் புரட்சியில் பெரும் பங்களிப்புச் செய்ததுடன் 50 ஆண்டுகால வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த பல்கலைக் கழகத்தின் 17-ஆவது துணைவேந்தராக பொறுப்பிலிருப்பதற்கு அன்னை மீனாட்சியின் அருளே காரணம்.

லஞ்ச, லாவண்யமற்ற நிர்வாகத்தை கடந்த ஓராண்டில் வழங்கியிருக்கிறேன். என்னோடு இங்குள்ள அனைத்து புலங்களின் தலைவர்களும், பேராசிரியர்களும் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் குறித்த மதிப்பீடு ஒன்றில் 54-ஆவது இடத்திலிருந்து தற்போது 45-ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளோம்.

யுஜிசி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்குகிற நிதியை போட்டி போட்டுப் பெறுவதில் காமராஜர் பல்கலைக் கழகமே முதலிடத்தில் உள்ளது. அண்மையில் மின் வளங்கள் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழகம், பாண்டிச்சேரி அளவில் காமராஜர் பல்கலைக் கழகமே முதன்மை விருதைப் பெற்றுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தோடும், தமிழக தொல்லியல் துறையோடும் இணைந்து கீழடி குறித்த அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை ஒரே சமயத்தில் எங்களது பேராசியரிகள் நான்குபேர் பெற்று சாதனை படைத்துள்ளனர்' என்றார்.

கடந்த 1966-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பல்கலைக் கழகம் தற்போது 54-ஆவது வயதில் நுழைகிறது. பல லட்சக்கணக்கான மாணவர்கள் இங்கிருந்து கல்வி கற்று பெரும் பொறுப்புகளில் சாதனை படைத்துள்ளதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

(இதற்கான வீடியோவை tn_mdu_01_spl_story_mku_54th_anniversary_vc_krishnan_byte_9025391 என்ற ஸ்லக் நேமில் உள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளவும்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.