மதுரையில், பிற்படுத்தப்பட்ட சமூக கூட்டமைப்பு சார்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் தேவநாதன் யாதவ் தலைமையில் இன்று (ஜன. 05) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிற்படுத்தப்பட்ட சமூக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் யாதவ், "முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுப்பதற்காக ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அந்த ஆணைய தலைவரை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
முன்னாள் நீதிபதியை நீக்கிவிட்டு வேறு சமுதாயத்தைச் சார்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். குறைந்தது 5000 கோடி ரூபாய் பட்ஜெட் இல்லாமல் சாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்க முடியாது. இது ஒரு கண்துடைப்பாக நடத்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிந்த பின்பு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.