ETV Bharat / state

புகார் விசாரணை செய்ய சிறப்பு காவல் அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - latest news

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார்களைப் பெற சிறப்பு காவல் அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கில், மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

புகார்
புகார்
author img

By

Published : Oct 20, 2021, 5:34 PM IST

மதுரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் ஐசக்பால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "காவல் நிலையங்களில் தினந்தோறும் பல்வேறு புகார்கள் வருகின்றன. இப்புகார்களை வழக்காகப் பதிவு செய்து புகார்களைப் பொறுத்து தீர்வு காண்பது, விசாரணை செய்வது, பாதுகாப்பு அளிப்பது போன்ற அனைத்து செயல்களையும் விசாரணை அலுவலர் செய்து வருகிறார்.

காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறையினாலும், விசாரணை அலுவலர் பல்வேறு வேலைகளை செய்வதால் புகார்கள் பதிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், குற்றம் நடந்த இடம், சாட்சியங்கள் அழிவதற்கான சூழல் ஏற்படுகிறது. குற்றம் புரிந்தவர்கள் தப்பிச் செல்லும் சூழலும் ஏற்படுகிறது.

காவலர் பற்றாக்குறை காரணமாக புகார்கள் எடுப்பதிலும் விசாரணை செய்வதிலும் பல்வேறு தாமதம் ஏற்படுகிறது. புகார் கொடுக்க வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இணையதளம் மூலம் புகார் அளிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருந்தாலும், நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து புகாருக்கான (CSR) ரசீது பெற வேண்டி இருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் விசாரணை செய்ய சிறப்பு காவல் அலுவலரை நியமிக்க வேண்டும். மேலும் புகார் பதியப்பட்டதற்கான (CSR) ரசீதை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு வழக்கின் விசாரணையையும் தனியாக டைரி மூலம் பதிவு செய்து உரிய முறையில் புகார்களை விசாரித்து அந்தப் புகாரை முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

புகார்
புகார்

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறியதை அடுத்து, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விசாகா குழு விசாரணைக்குத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.