மதுரை : சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியை சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் , உவச்சான் கண்மாயில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம், டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 200க்கும் அதிகமான லோடு மண் அள்ளியுள்ளார்.
இதனால் இந்த கண்மாய் சேதமடைந்து கனிம வளமும் திருடப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க : ராமாநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு