ETV Bharat / state

அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மருத்துவருக்கு தடை: மருத்துவ கவுன்சில் பதிவாளர் பதிலளிக்க உத்தரவு! - High court madurai

அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த, நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் எம்.எஸ்.ஜாக்சன் ஓர் ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்ய தடை விதித்த, மருத்துவக் கவுன்சிலின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The case against the doctor who spread slander about the corona action of the government!

author img

By

Published : May 27, 2021, 7:21 AM IST

மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் எம்.எஸ்.ஜாக்சன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வாட்ஸ் அப்-இல், வீடியோ ஒன்றை வெளியிட்டேன். இதனால், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததாக என் மீது நாகர்கோவில் மருத்துவம் மற்றும் கிராம சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2020ஆம் ஆண்டு ஆக.12ஆம் தேதி ரத்து செய்தது.

இதையடுத்து அரசு, கரோனா தொற்று நடவடிக்கைகளை விமர்சித்ததாக என் மீது குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியும், மருத்துவ கவுன்சில் பதிவேட்டிலிருந்து எனது பெயரை இடைக்காலமாக நீக்கியும் முறையே 2020ஆம் ஆண்டு ஆக 24, செப்.5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது.

மருத்துவக் கவுன்சில் விதிப்படி மருத்துவர்களின் தொழில் நடத்தை குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் நேரில் விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். என் மீது எந்தப்புகாரும் வராத நிலையில், மருத்துவக் கவுன்சில் தாமாக முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இதனால் இந்த உத்தரவுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து முறைப்படி விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் நான் ஒரு ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்ய தடை விதித்து மருத்துவக் கவுன்சில் 2021ஆம் ஆண்டு ஏப்.28 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்குத் தடை விதிக்காவிட்டால், மனுதாரரால் மருத்துவர் தொழில் செய்ய முடியாமல் போகும். எனவே தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து நீதிபதி மனு தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.