மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா இந்துப்பூரிலிருந்து பழனிசாமி என்பவர் ஓட்டிவந்த கார் அவ்வழியே ஐய்யம்பாளையத்தைச் சேர்ந்த மலைச்சாமி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறிய பழனிசாமியின் கார், எதிர் திசையில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதியது. இதனால் கேரளாவிலிருந்து வந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம் சித்தூரைச் சேர்ந்த மலைச்சாமி, காரில் சென்ற கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன், மசுனுபாத், கார் டிரைவர் கிளார் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த எட்டு பேர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.