ETV Bharat / state

கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி - no police protection for person involved in murder

Madras High Court Madurai Bench: போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி
கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 5:42 PM IST

மதுரை: மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும், தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி செய்ததாகவும் கூறியிறுந்தார்.

மேலும் தன் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையின் போது மட்டும் ஆஜராகி விட்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்றிருந்த தாகவும், இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்த போது திடிரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தன்னை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை; ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை!

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததையடித்து, பல லட்ச ரூபாய் செலவழித்து தற்போது உயிர் பிழைத்துள்ளதாக அவர் மனுவில் தெரிவித்தார். மேலும் பல தரப்பிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.கே.குருசாமி மீது பலமுறை கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரது உயிருக்கு உடனடியாக பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் வாதிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதி, கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது என கூறி, மனுதாரர் மீது தற்போது உள்ள வழக்குகளின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார். மேலும் மனு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.