மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவுற்றது. சுமார் பத்து பேர் வரையில் காயம் ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
2019ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக பாதுகாப்பு முறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்து செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பாலமேட்டில் 'தர்பார்' அமைத்த காளைகள் - சிறந்த வீரருக்கு கார் பரிசு
மாடுகள் வாடிவாசலிலிருந்து வெளிய அனுப்புவதில் குளறுபடி இருந்ததால், மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வந்தன. அதனால், ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.