ETV Bharat / state

காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் - அமைச்சர் மூர்த்தி - காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டத்தில் காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளாரேஸ் உள்ளிட்ட போட்டிகள் அடிக்கடி நடத்தப்படும் என வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் - அமைச்சர் மூர்த்தி

author img

By

Published : May 23, 2022, 1:09 PM IST

மதுரை : தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கருப்பாயூரணி பகுதியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழக வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 47 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் முதலில் வந்த மாட்டிற்கு இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அமைச்சர், மதுரை மாவட்டத்திலுள்ள காளை வளர்ப்போருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் ரேக்ளா ரேஸ் ஆக இருந்தாலும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் - அமைச்சர் மூர்த்தி

மேலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை கருத்து தொடர்பான கேள்விக்கு, ஒன்றிய அரசுதான் கண்டும் காணாமல் உள்ளதாக தெரிவித்தார். ஒன்றிய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய தொகையை கேட்டு பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரியாணிதான் முக்கியம்- ஓபிஎஸ் கலந்து கொண்ட விழாவில் தள்ளு முள்ளு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.