ETV Bharat / state

அலங்காநல்லூர் அருகே எருது கட்டுத் திருவிழா - சீறிப்பாய்ந்த காளைகள் - Bullfighting festival near Alankanallur

மதுரை: அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் நடந்த எருது கட்டுத் திருவிழாவில் காளைகள் சீறிப் பாய்ந்தன.

Bullfighting festival
அலங்காநல்லூர் அருகே எருது கட்டு திருவிழா
author img

By

Published : Dec 17, 2020, 9:46 PM IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் கலியுகமெய் அய்யனார்சாமி கோயில் சார்பாக, ஆண்டுதோறும் எருது கட்டுத்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். கரோனா பொதுமுடக்கத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவிழாக்கள் தடைபட்டுப் போயின.

ஆனால், கரோனா பொதுமுடக்க காலத்திலும் எருது கட்டுத் திருவிழா கிராம மக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளியின்றி எருது கட்டுத்திருவிழாவை கண்டு களித்தனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் எருது கட்டுத்திருவிழாவை, சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். இதில்மொத்தம் 14 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் திருவிழாவுக்காக நடத்தப்பட்ட இந்த எருதுகட்டுத்திருவிழாவில் யாருக்கும் பரிசுகள் வழங்கவில்லை.

அலங்காநல்லூர் அருகே எருது கட்டுத் திருவிழா

இதையும் படிங்க: 'விவசாயிகளின் வளர்ச்சிக்காக மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்' - துணை குடியரசுத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.